மோடி சனாதனத்தை கடைபிடித்திருந்தால் வெளிநாடு போயிருக்கக் கூடாது – ஆ.ராசா ஆவேசம்

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது இந்தியா முழுவதும் உருவெடுத்த நிலையில் திமுக எம்.பி ஆ.ராசா மோடி மற்றும் அமித்ஷாவுக்கு சவால் விட்டுள்ளார்.

குலத்தொழிலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தைக் கண்டித்து சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அங்கு கலந்து கொண்டு பேசிய திமுக எம்.பி ஆ.ராசா,”அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து மென்மையாக தான் பேசினார். டெங்கு, மலேரியாவை போல ஒழிக்க வேண்டும் என்றார்.

இந்த சமூகமானது சனாதனத்தை அருவருப்பாக பார்க்காது. டெங்கு, மலேரியா ஒரு தொழுநோயாகவும், எச்.ஐ.வி போலவும் உள்ளது. சானாதனத்தை மோடி கடைபிடித்தார் என்றால் வெளிநாடுகளுக்கு போயிருக்கக் கூடாது. ஒரு நல்ல இந்து கடல் கடந்து செல்லக் கூடாது. அவருக்கு ஊர் சுற்றுவதே வேலை” என்றார்.

மேலும பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷாவுக்கு சவால் விடுகிறேன். என் தலைவர் அனுமதியோடு சொல்கிறேன். 1 கோடி பேரை வேண்டுமானாலும் டெல்லிக்கு வரவையுங்கள். உங்களது அத்தனை சங்கராச்சாரியார்களையும் அமரவைத்து, எல்லா ஆயுதங்களையும் எடுத்து வாருங்கள்.

நான் அம்பேத்கர் மற்றும் பெரியார் புத்தகங்களை மட்டும் எடுத்து வருகிறேன். என்னை ஜெயித்து பாருங்கள்” என சவால் விட்டார்.

Leave A Reply

Your email address will not be published.