காவிரி விவகாரம் : இன்று அவசரமாக கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்

காவிரி நதி நீர் பங்கீடு விவகாரம் குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையமும், உச்சநீதிமன்றமும் உத்தரவிட்ட நிலையிலும், காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 21-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இதனிடையே, இரண்டாவது கட்டமாக தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு, காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த பரிந்துரை குறித்து முடிவெடுக்க, டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

இதில், தமிழ்நாட்டில் தண்ணீரின்றி குறுவை நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து அதிகாரிகள் எடுத்துரைப்பார்கள் என்பதால், 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற பரிந்துரையை ஆணையம் ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.