பிறந்து ஒரே நாளான சிசுவை புதைத்த நோர்வூட் பெண் – விசாரணைகள் ஆரம்பம்

நோர்வூட் பிரதேசத்தில் பிறந்து ஒரே நாளான சிசுவை பிரசவித்து வீட்டின் பின்புறத்திலுள்ள தேயிலை தோட்டத்திற்குள் புதைக்கப்பட்டுள்ள சம்பவத்தினால் நோர்வூட் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நோர்வூட் – ஜனபதய கொலனி பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் திருமணமாகாத 26 வயதுடைய பெண், குழந்தையை பிரசவித்து தனது வீட்டிற்கு பின்புறத்திலுள்ள தேயிலை தோட்டத்திற்குள் புதைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பிரதேச மக்கள் 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

ஹட்டன் நீதிமன்ற நீதவான் தலைமையில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Comments are closed.