தமிழத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு – தீப்பந்தம் ஏந்தி போராடிய கர்நாடக விவசாயிகள்!

காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்ததைக் கண்டித்து கர்நாடக மாநிலம் மாண்டியாவில் இரவு முழுவதும் கையில் தீப்பந்தம் ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவில் தலையிட மாட்டோம் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்ததுடன், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. அதன்படி, கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாய சங்கங்கள் மற்றும் கன்னட அமைப்புகள் முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.

காவிரி பாயும் மாவட்டமான மாண்டியாவில் விவசாயிகள் சாலையில் படுத்து போராட்டம் நடத்தினர். மற்றொரு புறம் தமிழ்நாட்டிற்க்கு காவிரி நீர் வழங்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் மாநிலம் தழுவிய போராட்டத்தில் பாஜக நேற்று ஈடுபட்டது.

இந்நிலையில், மாண்டியாவில் இரவு முழுவதும் கையில் தீப்பந்தம் ஏந்தி நூற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசு, தமிழ்நாடு அரசு மற்றும் காவிரியில் நீர் திறக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தை கண்டித்து விவசாயிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.