ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றதா பிரக்யான் ரோவர்… எழுப்பும் முயற்சியில் இஸ்ரோ..!

சந்திரயான்-3 திட்டத்தின் எதிர்பார்க்கப்பட்ட நிறைவு தேதி நீண்ட காலமாக இருந்தபோதிலும், நிலவின் தென் துருவ ஆராய்ச்சி தொடருமா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது. ஏனென்றால் சந்திர இரவுக்குப் பிறகு விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான ரோவரை எழுப்பும் முயற்சியில் இதுவரை வெற்றி கிடைக்கவில்லை. விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் சந்திரனின் மேற்பரப்பில் செயலற்ற நிலைக்குச் சென்ற பிறகு, அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்ட செயற்கைக்கோளால் பூமியின் மேல் வளிமண்டலம் எனப்படும் அயனோஸ்பியரில் ஓட்டை ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சந்திரயான்-3 பணியின் லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை சந்திரனில் ஒரு நாள் மட்டுமே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது சந்திரனின் ஒரு நாள் என்பது பூமியின் 14 நாட்கள் ஆகும். அந்த ஒரு சந்திரன் நாள் ஏற்கனவே முடிந்து சந்திரனில் இரவு ஏற்பட்டது. சந்திரனின் தென் துருவத்தில் இரவு என்பது மிகவும் குளிராக இருக்கும். அப்படிப்பட்ட நிலவின் விர நிலைமைகளைத் தாங்கும் வகையில் பிரக்யான் வடிவமைக்கப்படவில்லை.

அங்கு வெப்பநிலை 200 டிகிரி செல்சியஸுக்கு கீழே சென்று விடும். அப்போது சூரிய சக்தியில் இயங்கும் சாதனங்கள் வேலை செய்வதற்கு சூரிய ஒளி இருக்காது. அப்படித்தான் விக்ரம் லேண்டரும் பிரக்யான் ரோவரும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் ரஷ்யாவின் லூனா -25 சந்திரனில் மெதுவாக தரையிறங்க முடிந்திருந்தால், அதன் செயல்திறன் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ரஷ்யாவின் லூனா ரோவர் “புளூட்டோனியம் ரேடியோ ஐசோடோப் சாதனம்” மூலம் வடிவமைக்கப்பட்டது. இது ஒரு அணு பேட்டரி போன்றது. அந்த “அணு பேட்டரி” குறைந்த வெப்பநிலையில் கூட சாதனங்களை செயல்பட வைக்கும் வெப்பத்தை உருவாக்க முடியும். ஆனால் லூனாவால் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்க முடியவில்லை.

சந்திரயான்-3 திட்டத்தில் அத்தகைய வசதி இல்லை என்றாலும், இஸ்ரோ இன்னும் நம்பிக்கையுடன் உள்ளது. தென் துருவ ஆய்வுப் பணிக்கான நோக்கங்கள் ஓரளவுக்கு நிறைவேறிய பிறகும், லேண்டர் மற்றும் ரோவரின் ஆயுட்காலத்தை நீட்டிக்க இஸ்ரோ முயற்சி மேற்கொள்கிறது. அதனால் நிலவில் சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன் அனைத்து சாதனங்களையும் அணைத்து “ஸ்லீப் மோடில்” வைத்தது இஸ்ரோ. அதற்கு முன்பு பேட்டரிகள் முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்டிருந்தால், சந்திர இரவில் உயிர்ப்போடு இருக்கும் அளவுக்கு சாதனங்களை சூடாக வைத்திருக்க முடியும். ஆனால் நிலைமை வேறாக உள்ளது.

சந்திரயான்-3 மிஷன் மாட்யூல்கள் நிலவில் உறங்கிக் கொண்டிருந்தபோது, ​​அதற்கு மிக அருகில் மிகவும் சுவாரஸ்யமான ஒன்று நடந்தேறியுள்ளது.

அமெரிக்கவைச் சேர்ந்த விண்வெளி நிறுவனத்தின் செயற்கைக்கோள் ஏவப்பட்டதால், பூமியின் மேல் வளிமண்டலத்தின் ஒரு பகுதியான அயனோஸ்பியரில் ‘துளை’ ஏற்பட்டிருக்கலாம். டெக்சாஸைச் சேர்ந்த தனியார் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸ் செப்டம்பர் 14 அன்று விக்டஸ் நாக்ஸ் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. அந்த செயற்கை கோள் ஏவப்பட்ட பிறகு, வானத்தில் ஒரு வெள்ளை ஒளி பரவியதாக SpaceWeather.com என்ற இணையதளம் தெரிவித்துள்ளது. அந்த ஒளி மறைந்த பிறகு, ஒரு மங்கலான சிவப்பு பளபளப்பு இருந்ததாகவும், இது அயனோஸ்பியரை ராக்கெட் துளைத்ததால் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.