தந்தையைக் கடுமையாகத் தாக்கிய பொலிஸ் சார்ஜன்டான மகள் கைது!

காணித் தகராறு தொடர்பான சர்ச்சை தீவிரமடைந்ததை அடுத்து, தனது தந்தையைக் கடுமையாகத் தாக்கினார் எனக் கூறப்படும் பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருவளை பொலிஸில் கடமையாற்றும் சார்ஜன்டே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் சார்ஜன்டாக உள்ள தனது மகள் தன்னைத் தாக்கினார் என்று அஹுங்கல்ல பொலிஸில் தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸ் சார்ஜன்டான மகளும், முறைப்பாட்டாளரின் தந்தையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபோதும் இருவரும் சமரசம் செய்ய விரும்பவில்லை என்றும், இதையடுத்து பெண் பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.