பிக்பாஸ் 7 போட்டியாளர்களின் முழு விவரம்.. 21 பேரா?

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் உத்தேச பெயர் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

ஒவ்வொரு பிக்பாஸ் சீசன் தொடங்குவதற்கு முன்பும் இதுபோன்று உத்தேச பட்டியல் வெளியாவது வழக்கம்தான். அது போல இப்போதும் 21 போட்டியாளர்களின் பெயர் அதில் இடம்பெற்று இருக்கிறது.

அதே நேரத்தில் இந்த மாதிரி உத்தேச பட்டியலில் இருக்கும் பெயர்களில் பல போட்டியாளர்கள் ஒவ்வொரு சீசனிலும் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை அடித்துக் கொள்ள முடியாது. இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் தாண்டி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதில் கலந்து கொள்வதற்காக பல பிரபலங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் முதல் சீசன் தொடங்கப்படும் போது பெரிய அளவில் எதிர்பார்ப்பும், சர்ச்சைகளும் இருந்தது. அதற்குப் பிறகு தங்களுக்கு தெரிந்த பிரபலங்கள் தங்களுடைய நிஜ வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை பார்த்துக் கொள்வதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க பலர் தொடங்கினார்கள்.

அது முதல் சீசனில் கிடைத்த வரவேற்பு காரணமாகவே தற்போது வரைக்கும் ஆறாவது சீசன் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. அதுபோல இன்னும் ஒரு சில நாட்களில் அதாவது வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி பிக் பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்க இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் பல சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் தமிழில் இப்போதுதான் ஏழாவது சீசன் வருகிறது. பிற மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட சீசனை கூட கடந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி இவ்வளவு வெற்றி பெறுவதற்கு காரணம் இதற்கு தொகுப்பாளராக இருக்கும் கமல்ஹாசன் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகநாயகன் என்ற பெயர் பட்டத்தோடு வலம் வந்த கமல்ஹாசன் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி இருந்தார்.

அதோடு ஒவ்வொரு வாரமும் இவர் பஞ்சாயத்து செய்வதை பார்ப்பதற்காகவே பலர் வார இறுதி நாட்களில் இந்த நிகழ்ச்சிக்காக முன்பு ஆஜராகி விடுவது வழக்கம். அந்த வகையில் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வீடு அல்ல இரண்டு வீடுகள் என்றும் ஏற்கனவே ப்ரோமோ வெளியாகிவிட்டது. இந்த நிலையில் சும்மாவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. இப்போது இரண்டு வீடு என்பதால் என்ன மாதிரி இருக்கப் போகிறதோ என்று இந்த சீசனுக்கு ஆர்வம் அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் அக்டோபர் ஒன்றாம் தேதி மாலை 6:00 மணிக்கு பிக் பாஸ் கிராண்ட் லான்ச் நடக்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து போட்டியாளர்கள் குறித்த தகவல்களும் அடிக்கடி வெளியாகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் உத்தேச பட்டியல் இணையத்தில் கசிந்து இருக்கிறது.

அதில் நடிகை தர்ஷா குப்தா, மௌனராகம் சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகை ரவீனா, நடிகை வனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகா, பாண்டியன் ஸ்டோர் சீரியல் கதிர் (குமரன்), ரோபோ சங்கர் மகள் இந்திரஜா, நடிகை நிலா (அன்பே ஆருயிரே), நடிகை நிவிஷா, பிரபல மாடல் அனன்யா, ரோஷினி ஹரிப்ரியன், தொகுப்பாளினி ஜாக்லின், உமாரியாஸ் கான், ஸ்ரீதேவி விஜயகுமார், யுவன் பாலாஜி, நடிகர் அப்பாஸ், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், சத்யா சீரியல் நடிகர் விஷ்ணு, ரக்ஷன், மாகாபா ஆனந்த், பப்ளு பிரித்விராஜ், விஜே அர்ச்சனா என மொத்தம் 21 பிரபலங்களின் பெயர் அதில் இடம் பிடித்திருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.