கனேடிய பொலிஸ் போல நடித்து , 13 வயது சிறுமியை வன்புணர்வு செய்த யாழ். இளைஞர் கைது

வேலை நிமித்தமாக கனடா சென்று , அவரது வேலையை இழந்த நிலையில், அவருடைய நண்பருடன் தங்கியிருக்கும் போது , இக் குற்றத்தை செய்துள்ளார்.

மேலும் அவர் இப்படியான குற்றங்களைச் ஏற்கனவே செய்துள்ளாரா என்பதை அறிய, குற்றவாளியின் புகைப்படத்தை கனடாவின் பிரம்ரன் (Bramran) போலீசார் வெளியிட்டுள்ளனர். …

கனடாவில் 13 வயது சிறுமியொருவரை கனேடிய பொலிஸ் உத்தியோகத்தர் போல் பாவனை செய்து பாலியல் பலாத்காரம் செய்த யாழ்ப்பாணத்தில் பிறந்து , கனடாவிற்கு சென்ற இளைஞர் ஒருவரை நேற்று (25) கனேடிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

33 வயதான அனுஷன் ஜெயக்குமார் என்ற நபர், சாலையில் நடந்து சென்ற சிறுமியிடம் தன்னிடமிருந்து பொலிஸ் ஆவணத்தைக் காட்டி, அவளை விசாரிக்க விரும்புவதாகக் கூறி, பின்னர் அவளை வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கனடாவின் பிரம்ரன் ( Bramran ) போலீசார் தெரிவித்தனர்.

கனடாவில் இதுபோன்ற குற்றங்களை மற்ற குழந்தைகளுக்கு அல்லது பெண்களுக்கு எதிராக இவர் செய்துள்ளாரா என்பதைக் கண்டறியவும், வேறு குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறாரா என்று விசாரிக்கவும் கனேடிய காவல்துறை அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

தகவல் தெரிந்தவர்கள் 905-453-2121 ext 3460 என்ற எண்ணுக்கு புலனாய்வாளர்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அநாமதேயமாக குற்றத்தைத் தடுப்பவர்கள் 1-800-222-TIPS (8477) அல்லது peelcrimestoppers.ca என்ற இணைய தள முகவரிக்கு அறிவிக்கலாம் .

கைது செய்யப்பட்ட யாழ்.இளைஞன் கனடாவுக்கு தொழில் நிமித்தம் சென்றிருந்த நிலையில் வேலையிழந்த நிலையில் , அவரது நண்பருடன் தங்கியுள்ளதாக மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.