எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி நினைவிடங்களை இடிக்க வேண்டும்: சீமான் சர்ச்சை

சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் எம்.ஜி.ஆர், அண்ணா, ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய மறைந்த தலைவர்களின் நினைவிடங்களை இடிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சீமான் சர்ச்சையாக பேசியுள்ளார்.

தமிழக மாவட்டம், நாகப்பட்டினத்தில் உள்ள வேதாரண்யத்தில் நேற்று நடந்த நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய சீமான், “கடற்கரை என்பது மீனவர்களின் சொத்து. அது இப்போது, இரண்டு கட்சித் தலைவர்களின் சுடுகாடாக மாறியுள்ளது. ஆளுக்கு இரண்டரை ஏக்கரில் படுத்துக் கிடக்கிறார்கள்.

நாட்டின் விடுதலைக்காக செக்கிழுத்தவர்கள், தூக்கில் தொங்கியவர்களுக்கு எல்லாம் இல்லாத கல்லறை, இவர்கள் என்ன செய்து விட்டார்கள் என்று அமைத்தார்கள் என கேள்வி எழுப்ப வேண்டும்.

நாம் தமிழர் கட்சி ஆட்சி அமையும். தற்போது, தமிழர்கள் மீது கார்நாடகா அரசு தாக்குதல் நடத்துவதை எப்படி அமைதியாக பார்க்கிறதோ, அதேதேபோல, மெரினா கடற்கரையில் உள்ள சமாதிகளைக் கடப்பாரை கொண்டு இடிக்கும் போது அண்ணனின் அரசு அமைதியாக வெடிக்க பார்க்கும்.

சமாதிகளை இடித்து எலும்புகளை எடுத்துக் கொண்டு எங்கையாவது வைத்துக் கொள்ளட்டும்” என்று சர்ச்சையாக பேசியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “கர்நாடகா மாநிலத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்திற்கு காலனி மாலை போடுகிறார்கள். இறந்தது போல தூக்கி செல்கிறார்கள். அதை பார்க்கும் போது எனக்கு வலிக்கிறது. ஏனெனில், அது தமிழக முதலமைச்சர் என்பதால் துடிக்கிறது.

திமுகவில் யாரும் உயிருடன் இல்லாததால், மானம் ரோஷம் இல்லை. அதற்கும், நாம் தமிழர் கட்சி தான் பேச வேண்டியிருக்கிறது” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.