அதிரடியாக உயர்ந்த வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை : வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,898-ஆக உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அவ்வப்போது நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கடந்த மாதம் 1,695க்கு விற்பனையான வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.203 உயர்ந்து ரூ.1,898-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரம் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர் மாற்றமின்றி, ரூ.918.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் முதல் தொடர்ந்து சரிந்துவந்த வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால், கடைகளை வைத்திருப்போர் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.