நீதிக்காகத் தொடர்ந்தும் போராடுவார்கள் தமிழர்கள்! – சம்பந்தன் தெரிவிப்பு.

“இலங்கையில் பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராகத் தமிழ் பேசும் மக்கள் தொடர்ந்தும் போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. நீதி கிடைக்க அவர்கள் தொடர்ந்தும் போராடுவார்கள். முல்லைத்தீவு நீதிபதிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள மனித சங்கிலிப் போராட்டத்திலும் தமிழ் பேசும் மக்கள் ஓரணியாகத் திரண்டு பங்கேற்பார்கள்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

“தமிழ்பேசும் மக்கள் மீதான அடக்குமுறைகள் இன்று நீதித்துறை மீதும் பாய்ந்துள்ளது. நீதிபதிகளைக் கூடப் பேரினவாதம் இன ரீதியில் நோக்குகின்றது” – என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“எல்லாவற்றுக்கும் போராடித்தான் நாம் நீதியை தீர்வைப் பெற வேண்டுமெனில் ஜனநாயக ரீதியில் நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம். எமது போராட்டங்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் உரிய கவனம் செலுத்த வேண்டும்” – என்றும் சம்பந்தன் எம்.பி. மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.