லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று (04) மீள்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சமையல் எரிவாயு கொள்கலனின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்புக்களை வழங்குவதற்காக லிட்ரோ நிறுவனத்தின் ஊடக சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.

12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 343 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் புதிய விலை 3 ஆயிரத்து 470 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 137 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஆயிரத்து 393 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 63 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.