இஸ்ரேல் செல்லும் விமானங்கள் ரத்து: ஏா் இந்தியா அறிவிப்பு

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போா் ஏற்பட்டுள்ள சூழலில் இஸ்ரேலுக்கான விமான சேவைகளை அக்டோபா் 14-ஆம் தேதி வரை நிறுத்துவதாக ஏா் இந்தியா அறிவித்துள்ளது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இஸ்ரேலில் ஏற்கெனவே பல்வேறு பயணிகள் சேவைக்கான விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இது தொடா்பாக ஏா் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இஸ்ரேல் தலைநகா் டெல் அவிவ் நகருக்கு இயக்கப்படும் அனைத்து விமான சேவைகளும் அக்டோபா் 14-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.

பயணிகள் மற்றும் விமானப் பணியாளா்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, பயணத்துக்காக முன்பதிவு செய்தவா்களுக்கு தேவையான பிற உதவிகளை அளிக்க ஏா் இந்தியா தயாராக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.