2 சிறுமிகள் கொடூர கொலை…19 வயது இளம் பெண் கைது!

உத்தரப்பிரதேசம் மாநிலம் பகதுர்புர் மாவட்டம் பால்ராய் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று விவசாயி ஜெய்வீர் என்பவரது வீட்டில் அவரது இரண்டு பெண் குழந்தைகள் உயிரிழந்து கிடந்துள்ளனர். சுரபி என்ற 7 வயது சிறுமி மற்றும் ரோஷினி என்ற 6 வயது சிறுமியும் வீட்டில் சடலமாக கிடந்துள்ளனர். தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது ஜெய்வீரின் மூத்த மகள் அஞ்சலி பாலிடமும் விசாரணை செய்துள்ளனர். தனது சகோதரிகள் எப்படி உயிரிழந்தனர் என்பது தனக்கே தெரியாது என்றும் கூறியுள்ளளார் அஞ்சலி.

அன்று ஜெய்வீரும் அவரது மனைவியும் வீட்டில் இல்லை. மூத்த மகள் அஞ்சலி மற்றும் இரண்டு இளைய சகோதரிகளும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். இனால் சந்தேகமடைந்த போலீசார் அஞ்சலியிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது 19 வயது இளம் பெண் கூறியதைக் கேட்டு போலீசாரும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஞாயிற்றுக் கிழமையன்று பெற்றோர்கள் வீட்டில் இல்லாததால், அஞ்சலி தனது ஆண் நண்பர் ஒருவரை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். வீட்டிற்கு அந்த ஆண் நண்பர் வந்ததற்கு இரண்டு சிறுமிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த அஞ்சலி தனது ஆண் நண்பருடன் சேர்ந்து ஷாவல் என்னும் மண் அள்ளும் சாதனத்தைக் கொண்டு அடித்துள்ளனர். இதில் காயமடைந்த சிறுமிகள் இரணடு பேரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

சிறுமிகள் உயிரிழந்த பிறகு அந்த ஆண் நண்பர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

அதன் பிறகு பெற்றோர் வந்த பிறகு தனது சகோதரிகள் எப்படி உயரிழந்தார்கள் என்பதே தெரியவில்லை என நாடகமாடியுள்ளார். போலீசாரிடமும் இதே கதையை கூறியுள்ளார். ஆனால் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அஞ்சலி அனைத்து உண்மைகளையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து போலீசார் அந்த இளம் பெண்ணை கைது செய்தனர். அதோடு தப்பியோடிய அஞ்சலியின் ஆண் நண்பரையும் தேடி வருகின்றனர்.உடன் பிறந்த சகோதரிகளை மூத்த சகோதரியே அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுததியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.