உள்நாட்டு மீனவர்களினால் பிடிக்கப்படுகின்ற மீன்களை பயன்படுத்தி டின்மீன் உற்பத்தியை மேற்கொள்ளுமாறு கோரிக்கை

டின் மீன் உற்பத்திக்கு தேவையான மீன்களை நாட்டின் கடல் எல்லையில் இருந்து பெற்று கொள்ள முடிந்துள்ளமையினால் டின் மீன் உற்பத்தியின் போது, அவற்றை பயன்படுத்துமாறு மீனவர்களும் வர்த்தகர்களும் கேட்டுள்ளனர்.

எமது நாட்டில் உள்ள கடல் வளத்தின் மூலம் பாரிய அளவில் மீன் கிடைக்கின்றது. இம்மீன்களை பயன்படுத்தி டின் மீன் கைத்தொழிற்சாலைகளை நடத்திச்செல்ல முடியும். எமது நாட்டு மீனவர்களினால் பிடிக்கப்படுகின்ற மீன்களை பயன்படுத்தி டின் மீன் உற்பத்தியை மேற்கொள்ளுமாறு மீனவர்களும் மீன் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்மூலம் வெளிநாட்டுக்கு செலுத்த வேண்டிய பாரிய நிதியை சேமிக்க முடிவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.