சைபர் மோசடியில் ரூ.4 கோடியை இழந்த மும்பை தம்பதி

மிகப்பெரிய பெருநிறுவனத்தில் பணியாற்றி வந்த மும்பையைச் சேர்ந்த வயதான தம்பதி, கடந்த நான்கு மாதங்களில் சைபர் மோசடி மூலம் ரூ.4 கோடி அளவுக்கு பணத்தை இழந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இபிஎஃப் அலுவலகத்திலிருந்து பேசுவதாக ஒரு பெண், வயதான தம்பதியரில் மூதாட்டியை அணுகியிருக்கிறார். அப்போது, அந்தப் பெண், மூதாட்டியின் கணவர் முன்பு வேலை செய்த நிறுவனத்தின் பெயர், பான் அட்டை எண், ஓய்வுபெற்ற விவரங்களை சரியாகக் கூறியிருக்கிறார்.

இதன் மூலம், மூதாட்டியின் நம்பிக்கையைப் பெற்ற அந்தப் பெண், 4 லட்சத்தை செலுத்தினால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அது 11 கோடி ரூபாயாக திரும்பக் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.

தொடர்ச்சியாக, டிடிஎஸ் என்றும், ஜிஎஸ்டி என்றும் சிறுக சிறுக ஒரு தொகையை அப்பெண்மணி அனுப்பச் சொல்லியிருந்த நிலையில், திடீரென அவர்களது வங்கியின் ஒட்டுமொத்த வைப்பும் காலியாகியிருக்கிறது.

இது குறித்து காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்கள் அந்த முதிய தம்பதி. அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கும் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.