அதிவேகத்தில் வந்த கார்.. சிமெண்ட் லாரி மீது மோதி பயங்கர விபத்து – குழந்தை உட்பட 13 பேர் பலி!

லாரி மீது கார் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் இருந்து பெங்களூருக்கு டாட்டா சுமோ காரில் குழந்தை மற்றும் பெண்கள் உட்பட 14 பேர் சென்றுள்ளனர். இவர்கள் தசரா விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுது கர்நாடகா மாநிலம் சிக்கபல்லபுரம் மாவட்டத்தில் பகேபள்ளி பகுதியில் கார் சென்று கொண்டிக்கும்போது சாலையில் பனிமூட்டம் அதிகமாக இருந்துள்ளது.

இதனால் கார் டிரைவருக்கு சாலை சரியாக தெரியவில்லை, சாலையின் ஓரம் சிமெண்ட் ஏற்றி வந்த லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது அதன்மீது வேகமாக வந்த கார் மோதி விபத்திற்குள்ளானது.

இந்நிலையில், அதிவேகமாக வந்த அந்த கார் பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உட்பட 5 பேர் பலியாகினர். மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 7 பேர் இறந்தனர்.

இந்த பயங்கர விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.