எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சம்பளம் அதிகரிக்கப்படும் – ஜனாதிபதி

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (30) அமைச்சரவையில் உரையாற்றும் போது அறிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புடன் ,  தனியார் துறையினரின் சம்பளத்தையும் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் , அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதை அறிந்து ஜனதா விமுக்தி பெரமுன உள்ளிட்ட சில குழுக்கள் தமது அழுத்தம் காரணமாக இவ்வாறு ஜனாதிபதி கூற முற்படுவதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அமைச்சரவை கூட்டத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் உழைக்கும் மக்களின் சம்பளத்தை அதிகரிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாக உள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மூன்றாவது வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பொதுப்பணித்துறையினர் போராட்ட களத்தில்

பொதுப்பணித்துறையின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (30) நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையேற்றம் காரணமாக உழைக்கும் மக்கள் தாம் பெறும் கூலியில் வாழ முடியாத நிலையை அடைந்துள்ளதாகவும் அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் 300-400 வீதம் அதிகரித்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.