பிக் பாஸ் – 7 ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி!

அன்ன பாரதி வெளியேறிய எபிசோடு நாளை ஒளிபரப்பாக இருக்கிற நிலையில் இன்னொரு அதிரடியும் இன்று அரங்கேறியிருக்கிறது.

அது யாரும் எதிர்பாராதது! பிக் பாஸ் சீசன் 7 பதினெட்டு போட்டியாளர்களுடன் தொடங்கி இந்த சீசனில் இதுவரை எவிக்ஷனில் அனன்யா, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா தேவி ஆகியோர் வெளியேறினர். பவா செல்லத்துரை அவராகவே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

இந்தச் சூழலில் கடந்த வாரம் வைல்டு கார்டு மூலம் தினேஷ், கானா பாலா, பிராவோ, அர்ச்சனா, அன்ன பாரதி என 5 புதிய போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் சென்றனர்.

இதனால் வீட்டுக்குள் மீண்டும் பதினெட்டு போட்டியாளர்கள் என்ற நிலை உருவானது. சீசன் தொடங்கி 35 நாள்களை நெருங்கி வரும் நிலையில் இனிமேல் நிறைய டபுள் எவிக்ஷனுக்கு வாய்ப்புண்டு என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், நம்பகமான சோர்ஸ் மூலம் தற்போது கிடைத்துள்ள தகவல்படி இந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து அதிகாரபூர்வமாக எவிக்ட் ஆகி வெளியேறவிருப்பது பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி எனத் தெரியவருகிறது.

வைல்டு கார்டு மூலம் கடந்த வாரம்தான் இவர் நிகழ்ச்சிக்குள் சென்றார் என்றாலும் இந்த வாரம் இவர்தான் மிகக் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேறுவதற்கான பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் என்கிறார்கள்.
அன்ன பாரதி வெளியேறிய எபிசோடு நாளை ஒளிபரப்பாக இருக்கிற நிலையில் இன்னொரு அதிரடியும் இன்று அரங்கேறியிருக்கிறது. அது யாரும் எதிர்பாராதது!

சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம், தொடர்ந்து பேசி வரும் எல்லை மீறிய வார்த்தைகள் போன்றவற்றால் சர்ச்சையைக் கிளப்பிய பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றி இருக்கிறார்கள் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற போட்டியாளர்கள் அவர் மேல் வைத்த புகார்கள், அவர்களுடன் பிரதீப் நடந்துகொண்ட விதம் எனப் பல விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.

இது ஒரு புறம் இருந்தாலும் இந்த சீசனில் வலுவான போட்டியாளராகப் பார்க்கப்பட்ட பிரதீப் ஆண்டனி வெளியேறியிருப்பது பிக் பாஸ் ரசிகர்களை வருத்தம் கொள்ளச் செய்திருக்கிறது.
பிரதீப்பின் வெளியேற்றம் இன்று இரவே ஒளிபரப்பாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.