நல்லாயிருங்க `தீர விசாரிப்பதே மெய்!’ என கமலை வாழ்த்திய பிக் பாஸ் பிரதீப் : வைரலாகும் கமல் வீடியோ

அண்மையில் வெளியேற்றப்பட்ட பிக் பாஸ் போட்டியாளர் பிரதீப் ஆண்டனியும் கமல்ஹாசனுக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார்.

பிரதீப் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், “நான் உங்களின் பெரிய ரசிகன் சார். உங்களுடைய 69 வது பிறந்த நாளிற்கு என்னுடைய வாழ்த்துகள். தமிழ் சினிமாவிற்கு நீங்கள் அளித்த கலை மற்றும் பங்களிப்பு மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. லவ் யூ சார் என்று பதிவிட்ட அவர் பதிவின் கீழ் #NallaIrunga (நல்லாயிருங்க) #TheeraVisaripatheMei (`தீர விசாரிப்பதே மெய்!’) எனக் குறிப்பிட்டுள்ளதோடு , கமலின் ‘வசூல் ராஜா’ படத்தில் வரும் காட்சியை வைத்து மீம் வீடியோ ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார். பிரதீப்பின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 69-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
அவருக்குப் பல்வேறு திரைப் பிரபலங்களும் , அரசியல் கட்சித் தலைவர்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.