அரசியல் தீர்வு விடயத்தில் ஆஸி. மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் – சாணக்கியன் எம்.பி. கோரிக்கை.

அவுஸ்திரேலிய அரசானது இலங்கைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும் இடையிலான நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் சமகால அரசியல் தொடர்பாகவும், குறிப்பாக மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் காணப்படும் பிரச்சனைகள் தொடர்பான முழு விபரங்களை அறியும் முகமாகவும், அதற்கான தீர்வுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதேவேளை, எமது கட்சியின் எதிர்கால மாநாடு தொடர்பாகவும், இளைஞர்கள், புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவும் இலங்கையைப் போல் கூட்டாச்சி அரசியல் அமைப்பைக் கொண்ட நாடாகும். மாநிலம் போல் இங்கு மாகாணமாகக் காணப்படுகின்றது.

அங்கு மற்றைய நாடுகளைப் போல் அல்லாது இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர்ந்த சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் எனப் பலர் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.