சாலையில் கவிழ்ந்த மதுபான லாரி – போட்டி போட்டுக் கொண்டு அள்ளிச் சென்ற கிராம மக்கள்

ஆந்திராவில் மது பாட்டில்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்த நிலையில் பாட்டில்களை அப்பகுதி மக்கள் அள்ளிச் சென்றனர்.

ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கிச் சென்ற லாரி, மதுரவாடா அருகே திடீரென விபத்தில் சிக்கி சாலையில் கவிழ்ந்தது. அதில் லாரி டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அந்த விபத்தில் லாரியில் இருந்த சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் சாலையில் சிதறி விழுந்தன. அதைக் கண்ட அப்பகுதியினர் போட்டி போட்டிக் கொண்டு பாட்டில்களை வேட்டையாடினர்.

அப்போது காவலர் ஒருவர், காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் அளித்ததன் அடிப்படையில் கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். அதன் பின்னர் சாலையில் உடையாமல் கிடந்த மது பாட்டில்கள் காப்பாற்றப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.