பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையைக் கொன்ற பெற்றோர் அசாமில் கைது!

கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள முடிக்கல் பகுதிக்கு அருகே உள்ள கால்வாய் ஒன்றில் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டக் காவல்துறையினர் குழந்தையைக் கொலை செய்த பெற்றோரை அசாமில் கைது செய்துள்ளனர்.

கைதான குழந்தையின் பெற்றோர் மக்ஷிடுல் இஸ்லாம் (31) மற்றும் மஷிடா கத்துர் (31) ஆகியோர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டது. குழந்தையின் பாலினம் மற்றும் குழந்தையை வளர்க்க தேவைப்படும் வருங்காலச் செலவுகளை கருத்தில் கொண்டு இருவரும் குழந்தையைக் கொன்றுள்ளனர்.

குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட பின் பெரும்பாவூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் எர்ணாகுளத்தில் உள்ள பலகைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த வெளிமாநிலத் தொழிலாளர் தம்பதி கர்பமாக இருந்ததது தெரியவந்தது.

மேலும் கடந்த அக்டோபர் 8க்குப் பின்னர் அவர்களை யாரும் பார்க்கவில்லை என்றத் தகவலும் கிடைத்தது இதனடிப்படையில் அவர்களைப் பற்றிய விவரங்கள் சேமிக்கப்பட்டன. அசாமில் அவர்கள் இருக்கும் முகவரி கண்டறியப்பட்டு காவல்துறையின் ஒரு குழு அசாமிற்கு அனுப்பப்பட்டது. அசாம் காவல்துறையின் உதவியோடு குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டார். அவர் குற்றத்தை காவல்துறையிடம் ஒப்புக்கொண்டார். மேலும் குழந்தையின் தாயும் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் திருமணமானபின் சந்தித்த இவர்கள் காதலித்து அசாமிலிருந்து ஓடிவந்தது தெரியவந்தது. கேரளாவின் பல இடங்களில் 3 ஆண்டுகளாக வேலைசெய்துள்ளனர். சமீபத்தில் கர்பமாகியிள்ளார் முஷிடா. இருவரும் குழந்தையைப் பற்றி அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் பிரசம் அவர்கள் வீட்டிற்குள்ளேயே நடந்துள்ளது.

குழந்தையைக் கொல்லும் நோக்கத்திலேயே வீட்டில் குழந்தையைப் பெற்றுடுத்துள்ளார்கள் எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றர். மேலும் குழந்தையை அக்டோபர் 8 அன்று இரவு கொலை செய்து பிளாஸ்டிக் பையில் போட்டு யாருக்கும் தெரியாமல் கால்வாயில் போட்டுவிட்டு அசாமுக்கு ஓடிவிட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.