வானிலை முன்னறிவிப்பு.

19 நவம்பர் 2023 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 01.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீ கனமழை பெய்யக்கூடும்.

வடக்கு, மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.