71 வயதில் வெறும் காலுடன் ஓடி சாதனை படைத்த அகிலம் அக்கா.

அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற
National Masters & Seniors Athletics போட்டியில்
இலங்கையிலிருந்து கலந்து கொண்டு சாதனை படைத்தார்
முள்ளியவளை, முல்லைத்தீவை சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 71 வயதான திருமதி அகிலத்திருநாயகி பிலிப்பைன்ஸில் நடைபெற்ற தேசிய படைவீரர் தடகளப் போட்டியில் , பாதணிகள் இல்லாமல் ஓடியே இரண்டு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.


1500 மீட்டர் மற்றும் 5000 மீட்டர் ஓட்டத்தில் இரண்டு தங்கப் பதக்கங்களையும், 800 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

மேலும், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.

முல்லைத்தீவு முள்ளியவளை கிராமத்தை வசிப்பிடமாகக் கொண்ட அகிலத்திருநாயகி ஓய்வு பெற்ற சிறைச்சாலை அதிகாரியாவார்.1500m ஓட்டம் : தங்கப் பதக்கம்
5000m விரைவு நடை : தங்கப் பதக்கம்
800m ஓட்டம் :வெங்கலப் பதக்கம்
5000m ஓட்டம்:நான்காம் இடம்

Leave A Reply

Your email address will not be published.