ஹார்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு…….

குஜராத் டைடன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா, அந்த அணியிலிருந்து விலகி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக மும்பை அணி, பாண்டியாவுக்கு ரூ. 15 கோடி தரவுள்ளது.

2015 – ல் மும்பை அணியில் அறிமுகமான பாண்டியா, அந்த அணி 2015, 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பைகளை வெல்ல முக்கியப் பங்களித்தார்.

2022-ல் புதிய அணியான குஜராத் டைடன்ஸுக்கு மாறினார் பாண்டியா. அவர் தலைமையில் முதல் வருடத்திலேயே ஐபிஎல் கோப்பையை வென்ற குஜராத் அணி, இந்த ஆண்டு இறுதிச்சுற்று வரை முன்னேறியது.

ஐபிஎல் போட்டியில் மும்பை, குஜராத் அணிகளில் நிகழவுள்ள இந்த மாற்றம் கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.