ஹரியாணாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.0 ஆகப் பதிவு

ஹரியாணா மாநிலத்தின் சோனிபட் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நான்கு மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஹரியாணாவின் சோனிபட் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.0 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.

இதனால் சோனிபட் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்தவித தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை.

Leave A Reply

Your email address will not be published.