நுவரெலியா தபால் நிலையத்தின் கட்டடத்தை முதலீட்டு திட்டத்துக்குப் பயன்படுத்த அனுமதி.

நுவரெலியா தபால் நிலையக் கட்டடத்தை முதலீட்டு திட்டமொன்றுக்காகப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க, அதன் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் நகர அபிவிருத்தி அதிகார சபையால் மேற்கொள்ளப்படவுள்ளன.

இது தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர கருத்துத் தெரிவிக்கையில், தபால் நிலையத்திற்கான மாற்று இடமொன்று வழங்கியதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.