ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார் வடிவேல் சுரேஷ் எம்.பி.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்

ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் இதற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான நலன்புரி விடயங்கள், மகளிர் மேம்பாடு, சிறுவர் நலத்திட்டங்கள், தமிழ் பாடசாலைகள் உள்ளிட்ட ஏனைய பாடசாலைகள் – சுகாதார சேவைகளை மேம்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பதுளை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவான வடிவேல் சுரேஷ், இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்து வருகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.