யாழ். அச்சுவேலியில் டெங்கு விழிப்புணர்வு வீதி நாடகம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு தெருவெளி நாடகம் அச்சுவேலியில் நேற்று நடைபெற்றது.

ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலய மாணவர்களால், மக்கள் மத்தியில் டெங்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்தத் தெருவெளி நாடகம் அச்சுவேலி பிரதான பஸ் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றது.

டெங்கு நோயை ஏற்படுத்தும் காரணிகள், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியம், யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய் தொடர்பான விபரங்கள், அச்சுவேலிப் பகுதியில் அதிகரித்துள்ள டெங்கு நோய் தொடர்பான விவரங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் இந்தத் தெருவெளி ஆற்றுகை மூலம் வெளிப்படுத்தப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.