இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் மாயமான மோட்டார் சைக்கிள் காலியில் – கிளிநொச்சியில் வசிக்கும் உரிமையாளருக்கு அழைப்பாணை.

இறுதிப் போரின்போது முள்ளிவாய்க்காலில் மோட்டார் சைக்கிளை இழந்த கிளிநொச்சியைச் சேர்ந்த உரிமையாளர் ஒருவருக்கு நேற்று காலி நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இறுதி யுத்த காலத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவரின் மோட்டார் சைக்கிள் முள்ளிவாய்க்காலில் விடப்பட்ட நிலையில் அது படையினரின் பிடியில் இருந்து காணாமல்போயிருந்த்து.

இவ்வாறு போர்க் காலத்தில் பறிபோன மோட்டார் சைக்கிளை உரிமையாளர் நீண்ட காலம் தேடியும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் 14 ஆண்டுகளின் பின்பு கடத்தல் சம்பவம் ஒன்றுடன் இந்த மோட்டார் சைக்கிள் தொடர்புபட்டு மீட்கப்பட்டுள்ளதால் உரிமையாளரை நாளை 8 ஆம் திகதி நீநிமன்றில் ஆஜராகுமாறு காலி நீதிமன்றம் மோட்டார் சைக்கிள் உரிமையாளருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இறுதி யுத்தத்தின்போது தமிழ் மக்களால் முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்ட பல நூறு வாகனங்கள் படையினரின் துணையுடன் தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டன என்று ஏற்கனவே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.