இரு வயோதிபர்கள் மயங்கி வீழ்ந்து சாவு! – யாழில் சோகம்.

யாழ்ப்பாணத்தில் இருவேறு இடங்களில் திடீரென மயங்கி வீழ்ந்து வயோதிபர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சங்கானை பகுதியில் உள்ள அரைக்கும் ஆலையில், அரைக்கக் கொடுத்து விட்டு, கதிரையில் காத்திருந்தவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அவரை மீட்டு சங்கானை பிரதேச வைத்தியசாலையில் சேர்த்த போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பொன்னாலை மேற்கு சுழிபுரத்தைச் சேர்ந்த இரட்ணம் அருளானந்தம் (வயது 69) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, பலாலி பகுதியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மயங்கி வீழ்ந்த வயோதிபரை வீதியால் சென்றவர்கள் மீட்டு, தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

புன்னாலைக்கட்டுவான் வடக்கைச் சேர்ந்த செல்வம் சிவானந்தம் (வயது 81) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி இரு சம்பவங்களும் நேற்று இடம்பெற்றுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.