போதைப்பொருளுடன் சிக்கிய காதல் ஜோடி! – வவுனியாவில் பொலிஸார் அதிரடி.

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் காதல் ஜோடி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளது என்று சிதம்பரபுரம் பொலிசார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சிதம்பரபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை செய்த போது, அங்கு தங்கி இருந்த காதல் ஜோடியிடம் கஞ்சாவும், தொலைபேசியினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனையடுத்து கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்தில் காதலர்கள் இருவரும் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதியைப் பொலிஸார் பெறவுள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கை வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் நாலக அசோக்குமாரவின் வழிநடத்தலில் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.நிரோசன் தலைமையில் இ.மதன்ராஜ், செ.வன்னிநாயக, சேனாதீர, மதுசங்க, ரஞ்சுலா சுபத்திரா ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.