ஜெர்மன் ரீதியிலான பூப்பந்தாட்டப் போட்டிகளில் சிறந்த வீரர் தெரிவு

2023 ஆண்டு முழுவதும் நடைபெற்று முடிந்த மாகாணங்கள், மாவட்டங்களுக்கு இடையிலான போட்டிகளில், போட்டியாளர்களின் 5 சிறப்புப் பெறுபேறுகள் கவனத்தில் கொள்ளப்பட்டு,
நாடு முழுவதிலுமிருந்து முதல் 36 போட்டியாளர்கள் செய்யப்பட்டிருந்ததோடு , இந்த ஆண்டுக்கான பூப்பந்தாட்டப் போட்டிகளில் , 11 வயதிற்குட்பட்ட பிரிவில், சிறந்த வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்கள்.

இதில் பெண்கள் பிரிவில் , தமிழி மார்க்கண்டு , அனந் அணிக்கா ஆகியோரும் , ஆண்கள் பிரிவில் ஹர்சத்குமார் கார்த்திக் என 3 வீரர்கள் இடம்பெற்றிருந்தார்கள்.

தெரிவு செய்யப்பட்ட சிறந்த 36 வீரர்களிடையே இடம்பெற்ற Champion league போட்டிகளில் மீண்டும் இம் மூவரும் சிறப்பாக தமது திறமைகளை ஆக்ரோசமாக வெளிப்படுத்தி வெற்றிகளை தமதாக்கிக்கொண்டார்கள்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் , ஹர்சத்குமார் கார்த்திக் ,  1 ம் இடத்தையும் , பெண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழி மார்க்கண்டு , 5ம் இடத்தையும் , ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஹர்சத்குமார் கார்த்திக் , 3ம் இடத்தையும் , பெண்கள் இரட்டையர் பிரிவில் தமிழ் மார்க்கண்டு , 2ம் இடத்தையும் பெற்றனர்.


2023 ஆண்டின் ஜெர்மனிய தேசிய தரவரிசைப் பட்டியலில், ஹர்சத்குமார் கார்த்திக் ,  2ம் இடத்திலும், தமிழி மார்க்கண்டு , 3ம் இடத்திலும், அனிகா ஆனந் 17ம் இடத்திலும் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அனிகா ஆனந் இறுதியாக நடைபெற்ற Champion league போட்டியில் இறுதிச் சுற்றுவரை மிகவும் சிறப்பாக ஆடியிருந்தார்.

ஹர்சத்குமார் கார்த்திக் இவ்வாண்டில் யேர்மனி ரீதியாக நடைபெற்ற 5 போட்டிகளில் முதலாம் இடத்தை பெற்றிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.