பாலியல் வல்லுறவு, ஆள்கடத்தல் – மலையாள சூப்பர் ஸ்டார் திலீப் மனு தள்ளுபடி

2017 ஆம் ஆண்டில், மலையாள நடிகையை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மலையாள திரைப்பட நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக இருந்த மோளிவுட் நடிகர்கள் சித்திக் மற்றும் பாமா ஆகியோர் தங்கள் சாட்சியங்களை  மாற்றியுள்ளது கேரள மக்கள் மனதில் பெரும் அதிர்வலையை உருவாக்கியுள்ளது.

 

ஊடக அறிக்கையின்படி, அம்மா (மலையாள திரைப்பட கலைஞர்களின் சங்கம்) ஏற்பாடு செய்த மேடை நிகழ்ச்சியின் ஒத்திகையின் போது நடிகை மற்றும் திலீப் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் நடிகை தாக்கப்பட்டதாகவும்  சாட்சியம் அளித்திருந்த சித்திக் மற்றும் பாமா, தற்போது சம்பவத்தை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து, சாட்சிகள் விரோதமாக மாறியதாக நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வலியுறுத்தியது.

இளம் நடிகை பிப்ரவரி 18, 2017 அன்று வீட்டிலிருந்து படப்பிடிப்பிற்கு போகும் வழியில் வாடகை குண்டர்களால் திட்டமிடப்பட்டு,    பாலியல் வல்லுறவிற்கு உள்படுத்தப்பட்ட வழக்கு பதிவாகியது. நடிகை வழக்கில், ஒரு பெரிய திருப்பமாக இதில் மூளையாக செயல்பட்ட நடிகர் திலீப் அதே ஆண்டு ஜூலை 17 அன்று கைது செய்த கேரள காவல்துறை வழக்கையும் பதிவு செய்துள்ளது. 85 நாட்கள் சிறையில் கழித்த திலீப்,  கேரள உயர் நீதிமன்றத்தால் கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.,

இந்த வழக்கில் பிரதான குற்றவாளியான பல்சர் சுனியை 2013 ல் கொச்சியில் உள்ள ஹோட்டல் அபாத் பிளாசாவில் சந்தித்ததை அறிந்திருப்பதாக கூறியிருந்த மற்றொரு மோளிவுட் நடிகை பிந்து பானிக்கர் தனது முந்தைய அறிக்கையை மாற்றியிருந்தார்.  அதே போல் இடவேளா பாபு என்ற் நடிகரும் கூறுமாறியிருந்தார்.

சிறப்பு அரசு வக்கீல் ஏ சுரேஷன், எர்ணாகுளத்தில் உள்ள கூடுதல் சிறப்பு அமர்வு நீதிமன்றம், குற்றத்தில் தனக்கு எதிராக முதன்மையான ஆதாரங்கள் இருப்பதாக அரசு தரப்பு வாதத்தை ஒப்புக் கொண்டதாகவும், இந்த வழக்கில் எட்டாவது குற்றம் சாட்டப்பட்ட நடிகரின் மனுவை தள்ளுபடி செய்ததாகவும் கூறினார்.

இந்த வழக்கில் 10 குற்றவாளிகள் இருந்தனர்.  நடிகையை அச்சுறுத்துவதற்காக இந்த கொடும் செயலை  படமாக்கியதும்  விசாரணயில் தெரிய வந்திருந்தது.  பின்னர் இந்திய விதிகளின் கீழ் ஆள் கடத்தல், வல்லுறவு குற்றங்கள் தொடர்பாக திலீப் கைது செய்யப்பட்டார்

 

திலீபின் முன்னாள் மனைவி நடிகை மஞ்சு வாரியரின் நண்பியாக இருந்த நடிகையாவார் கொடும் செயலுக்கு உள்ளாக்கப்பட்ட நடிகை.   . அம்மா (மலையாள திரைப்பட கலைஞர்களின் சங்கம்) பாதிக்கப்பட்ட நடிகை பக்கம் நிற்பதாக கூறிக்கொண்டாலும் குற்றவாளி நடிகரை காப்பாற்றவே விளைகிறது என குற்றச்சாட்டுகின்றனர்.  பாதிக்கப்பட்ட நடிகையின் பக்கம் நடிகைகள் ரேவதி, பார்வதி போன்றோர்  சாட்சியம் அளித்துள்ளனர். சட்ட நிபுணர்கள் கருத்துப்படி சாட்சியங்கள் கூறுமாறினால் பாதிக்கப்பட்ட நடிகையின் மொழியின் அடிப்படையில் திலீப் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது ..

Leave A Reply

Your email address will not be published.