7 நாள் சடங்கு – இன்று முதல் பூஜைகள் – களைகட்டும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்..!

வரும் 22-ஆம் தேதி மிக பிரமாண்டமாக அயோத்தி ராமர் கோவில் திறப்பு நடைபெறவுள்ளது.

இதற்கான முன்னேற்பாடுகளில் ஆளும் மத்திய, உத்தரபிரதேச மாநில பாஜக அரசு முழுவீச்சில் இறங்கியுள்ளது. பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ள இந்த கோவிலுக்கு நாட்டின் பல முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

அனைவரின் கவனத்தையும் இந்த கோவிலின் திறப்பு விழாவின் பக்கம் பாஜக அரசு திரும்பியிருக்கும் சூழலில், இதில் கலந்து கொள்வதை காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அதே நேரத்தில், கோவில் கும்பாபிஷேகத்திற்காக 11 நாட்கள் விரதம் இருப்பதை துவங்கியுள்ள நாட்டின் பிரதமர் மோடி, அது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, இதற்காக நாட்டு மக்களின் ஆசிர்வாதத்தை வேண்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த சூழலில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று(16-01-2024) முதல் 7 நாட்களுக்கு இந்து மரபுகளின்படி சடங்கு சம்பிரதாய பூஜைகள் நடைபெறவுள்ளது.

இன்று ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவால் நியமிக்கப்பட்ட ஆச்சார்யா பரிகார விழாவை நடத்துகிறார். அதனை தொடர்ந்து, நாளை(ஜனவரி 17) ராம் லல்லா சிலையின் பரிசார் பிரவேசம் விழா நடைபெறுகிறது.

18 ஜல யாத்திரை, தீர்த்த பூஜை, கந்தாதிவாஸ் சடங்குகளும், 19-ஆம் தேதி கேசராதிவாஸ், கிருதாதிவாஸ் ஔஷததிவாஸ் போன்ற சடங்குகளும் நடைபெறுகின்றன.

19-ஆம் தேதி மாலை, தான்யாதிவாஸ் சடங்கு நடைபெறும் நிலையில், 20-ஆம் தேதி காலை ஷர்கராதிவாஸம், பலாத்வாஸ் சடங்குகளும், மாலையில் புஷ்பதீபம் நடக்கவுள்ளன.

21-ஆம் தேதி காலை மத்யாதிவாஸ் மற்றும் மாலை ஷியாதிவாஸமும் சடங்குகளும் நடைபெறவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.