முதலாம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு…

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம் விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியதுடன் அதிபர்கள் நேர்முகப்பரீட்சை நடத்தி மாணவர்களை சேர்த்துக்கொள்வார்கள்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாத்திரம் பாடசாலைகளில் ஆறாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுகிறது.

2024 ஆம் ஆண்டில், தரம் 1, 5 மற்றும் 6 தவிர இடைநிலை வகுப்புகளுக்கு க.பொ.த. மாணவர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பங்கள் (உயர்தரம் உட்பட) பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் மேலும் அந்த பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருப்பின் அதிபர்கள் கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம் நேர்காணல்களை நடத்தி தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலை ஒப்புதலுக்காக கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைப்பார்கள்.

மேலும், 2024 ஆம் ஆண்டுக்கான வகுப்புகள் தொடர்பான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் கல்வி அமைச்சுக்கோ அல்லது பாடசாலைகளுக்கோ அனுப்பப்படக் கூடாது எனவும், பாடசாலைகளுக்கான அனுமதிக் கடிதங்கள் கல்வி அமைச்சினால் வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கின்றோம்.

Leave A Reply

Your email address will not be published.