சனத் நிஷாந்தவின் பூதவுடல் ஜயரத்ன மலர் சாலையில் (வீடியோ)

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று மாலை 6 மணியளவில் பொது அஞ்சலிக்காக பொரளை ஜயரத்ன மலர் சாலைக்கு கொண்டு வரப்பட்டது.

பூதவுடல் நாளை முற்பகல் 10.30 மணியளவில் புத்தளத்தில் உள்ள வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி நிகழ்வுகள், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன.


கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நேற்று இரவு திருமண நிகழ்வுகள் 2ல் கலந்து கொண்டு கொழும்பு நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்த போது , கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்தார்.

அவரது மெய்க்காப்பாளராக இருந்த போலீஸ் கான்ஸ்டபிளும் விபத்தில் உயிரிழந்தார்.

தற்போது கொழும்பு ஜயரத்ன மலர்சாலையில் மக்கள் மரியாதைக்காக வைக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சரின் பூதவுடல் நாளை (26) புத்தளம் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்படும்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த சொகுசு வாகனம் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் 11வது கிலோமீற்றர் அருகில் விபத்துக்குள்ளானது.

கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கொள்கலன் பாரவூர்தியை முந்திச் செல்ல முற்பட்ட போதே, ​​அவர் பயணித்த வாகனம் , கன்டெய்னர் பாரவூர்தியின் பின்பகுதியில் மோதி பின்னர் பாதுகாப்பு வேலியில் மோதியுள்ளது.

விபத்தின் போது, ​​இராஜாங்க அமைச்சர், சாரதி மற்றும் இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்புக்காக இருந்த பொலிஸ் அதிகாரி ஆகியோர் வாகனத்தில் இருந்தனர்.

விபத்தின் பின் அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், இராஜாங்க அமைச்சரும் பின் இருக்கையில் இருந்த அவரது பாதுகாப்பு அதிகாரியும் வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர்கள் சென்ற வண்டியின் சாரதியும் காயமடைந்து தற்போது ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மரண விசாரணை வெலிசர பிரதான நீதவான் தம்மிக்க உடுவெவிதானவினால் நடத்தப்பட்டது.

பிரேத பரிசோதனையின் பின்னர் இராஜாங்க அமைச்சரின் சடலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று மாலை 6 மணியளவில் பொது அஞ்சலிக்காக பொரளை ஜயரத்ன மலர் சாலைக்கு கொண்டு வரப்பட்டது.

பூதவுடல் நாளை முற்பகல் 10.30 மணியளவில் புத்தளத்தில் உள்ள ஆரச்சிக்கட்டுவ வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த 03 மே 1975 இல் பிறந்தார் , இறக்கும் போது அவருக்கு வயது 48.

சனத் நிஷாந்தவின் பூதவுடல் ஜயரத்ன மலர் சாலையில்

மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வீட்டிற்கு ஜனாதிபதி விஜயம்

Leave A Reply

Your email address will not be published.