திருமதி ஜெயலக்‌ஷ்மி யோகராஜா இறைவனடி எய்தினார்

யாழ். வல்வெட்டித்துறை, “காட்டுவளவை” பிறப்பிடமாகவும், “கொழும்பு, பருத்தித்துறை, சென்னை, லண்டன்” ஆகிய இடங்களில் வசித்தவருமான திருமதி ஜெயலக்‌ஷ்மி யோகராஜா (லக்‌ஷ்மி அம்மா / தங்கன்) அவர்கள் 23-01-2024 செவ்வாய்க்கிழமை தை மாத பூர்வபக்க திரயோதசி திதியில் இறைவனடி எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற நடராஜா (ராசதுரை) – தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் ஏக புதல்வியும், அமரர் நடராஜா யோகராஜாவின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற திருச்சிற்றம்பலம் (ராசலிங்கம்) – யோகாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மருமகளும், பார்த்தீபன் [பாபு] (UK), காண்டீபன் (Australia), பகீரதன் [பகீ] (UK) ஆகியோரின் அன்புத் தாயாரும், சௌமியா, சுதாஸ்வரி, இன்கா ஆகியோரின் அன்பு மாமியாரும், பாவலா, நாவலன், மாவலன், ஹரி, ஹேசல் ஆகியோரின் ஆசை அப்பாச்சியும், காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரமூர்த்தி, தணிகாசலம் (கலாநிதி ஸ்டோர்ஸ்), திருநாவுக்கரசு (சந்திரா ஸ்டோர்ஸ்), சுந்தரமூர்த்தி,
மற்றும் தற்போது வல்வெட்டித்துதுறையில் வசிக்கும் விஸ்வநாதப்பிள்ளை (தம்பி அண்ணா), தங்கராசா, ராமச்சந்திரன் (ராமு கடை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இறுதிக்கிரிகைகள் மற்றும் ஏனைய விபரங்கள் பின்னர் அறியத்தருகின்றோம். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக விபரங்கள் :
https://www.riphall.com/202401231235

Leave A Reply

Your email address will not be published.