இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில் மரணம்: உடல் நாளை சென்னைக்கு …..

பழம்பெரும் இசை அமைப்பாளரும் பாடகருமான இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார்.

அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் ஆறு மாதங்களாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இளையராஜா இசை நிகழ்ச்சிக்காக இலங்கைக்கு வந்த சமயத்தில் பவதாரிணி மரணமடைந்தமை பலருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. காலமான பவதாரணி இறக்கும் போது அவருக்கு வயது 47.

அவரது உடல் நாளை சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

பவதாரணி ஒரு தமிழ் திரைப்பட பின்னணி பாடகி , இசையமைப்பாளர் மற்றும் பல விருதுகளை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார்.

மறைந்த சனத் நிஷாந்தவின் பூதவுடல் ஜயரத்ன மலர்சாலைக்கு : ஞாயிறு ஆரச்சிகட்டுவவில் அடக்கம் செய்ய முடிவு

Leave A Reply

Your email address will not be published.