‘தொழில்நுட்ப பிழை’ காரணமாக ஏற்பட்ட ஹிஸ்புல்லா ஆயுதக் கிடங்கு குண்டு வெடிப்பு

லெபனான்: பெய்ரூட்டிலிருந்து 50 கி.மீ தெற்கே உள்ள ஐன் கானா என்ற தெற்கு கிராமத்தில் வெடிப்பு நிகழ்ந்ததாக லெபனானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கோட்டையில் இன்று (22) ஒரு ஆயுதக் கிடங்கு வெடிப்பு நிகழ்ந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் விளைவாக, ஐன் கானா கிராமம் புகை மூடியிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அங்கானா தலைநகர் பெய்ரூட்டிலிருந்து 50 கி.மீ தெற்கே உள்ள ஒரு கிராமமாகும்.

குண்டுவெடிப்பில் உயிரிழப்புகள் இருப்பதாக பாதுகாப்புப் படையினர் கூறினர், ஆனால் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்று கூறவில்லை.

தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போராளிகளின் அரசியல் கோட்டையாகும்.

ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஷியா முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அரசியல் ரீதியாகவும் ஆயுதமேந்தியவர்களாகவும் வலுவான நிலையில் இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘தொழில்நுட்ப பிழை’ காரணமாக ஏற்பட்ட ஹிஸ்புல்லா ஆயுதக் கிடங்கு வெடித்ததாக ஹிஸ்புல்லா தரப்பு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.