சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! – சஜித் பிரேமதாச

இணையவழி பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்கும் போது, ​​உச்ச நீதிமன்றம் வழங்கிய 09 பரிந்துரைகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன புறக்கணித்துள்ளதால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

காலியில் இன்று (பிப்ரவரி 03) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் மீது தமக்கு இனி நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தார்.

“சபாநாயகர் இணைய பாதுகாப்பு சட்டத்திற்கு சட்டவிரோதமாக ஒப்புதல் அளித்துள்ளார். விஷயத்தை அலசினோம். 09 வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. சபாநாயகர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. சபாநாயகர் மீது நாடாளுமன்றத்திற்கு நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கத்துவம் பெற்று கட்சியை விமர்சிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, பதவி வேறுபாடின்றி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.