OTTயில் ஒரே தேதியில் நேருக்கு நேர் மோதும் 2 தமிழ் படங்கள்..

குறிப்பிட்ட திகதியில் ஒவ்வொரு படமாக வெளிவந்த நிலையில் தற்போது ஒரே திகதியில் இரண்டு தமிழ் படங்கள் வெவ்வேறு OTT தளங்களில் வெளியாக உள்ளன.

இரண்டு படங்களுக்கு இடையில் தியேட்டரில் போட்டியை கிளம்புவது போல தற்போது OTT தளங்களிலும் அந்த ஐடியாவை செயல்படுத்த முடிவு செய்துள்ளனர்.

அந்த வகையில் jee5 தளத்தில் விஜய் சேதுபதி நடித்த கா/பெ ரணசிங்கம் படமும், அமேசான் தளத்தில் மாதவன், அனுஷ்கா நடித்த நிசப்தம் படமும் அக்டோபர் இரண்டாம் தேதி வெளியாக உள்ளது.

இந்த இரண்டு படங்களில் எந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பதை காண தமிழ் சினிமா உலகமே காத்துக் கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வளவுதான் கட்டணம்..
க/பே ரணசிங்கம் படத்தை OTT தளத்தில் வெளியிட முடிவு செய்து zee5 தளத்திற்கு விற்றுவிட்டனர். இந்நிலையில் ஜி5 பிளக்ஸ் என்ற OTT தளத்தில் அக்டோபர் 2ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தை ஒரு முறை பார்க்க ரூ.199/- ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தால் குறைந்தது இரண்டாயிரம் செலவாகும் நிலையில் வெறும் 199 ரூபாயில் அனைவரும் டிவியில் படம் பார்த்துக் கொள்ளலாம் என்பதால் ரசிகர்கள் இதை வரவேற்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.