திருக்கோவில் பிரதேச செயலக “கழிவுபொருள் அகற்றுதலும் காடு வளர்த்தலும்”

திருக்கோவில் பிரதேச செயலகத்தின் சுற்றுச்சூழல் முகாமைத்துவ செயல் திட்டத்தின் கீழ் “கழிவுபொருள் அகற்றுதலும் காடு வளர்த்தலும்” செயற்றிட்டத்தின் ஆரம்ப கட்ட கலந்துரையாடல்…

திருக்கோவில் பிரதேச செயலகத்தின் சுற்றுச்சூழல் முகாமைத்துவ செயல் திட்டத்தின் கீழ் “கழிவுபொருள் அகற்றுதலும் காடு வளர்த்தலும்” செயற்றிட்டத்தின் ஆரம்ப கட்ட கலந்துரையாடல் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று (23.09.2020)காலை இடம்பெற்றது.

இந் நிகழ்வில் திருக்கோவில் காஞ்சிரங்குடா 242வது படையணி கட்டளைஅதிகாரி டிஷாநாயக்கா ,திருக்கோவில் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி S.S.ஜயவீர,திருக்கோவில் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் K.சதிசேகரன், திருக்கோவில் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் செல்வி அனோஜா மற்றும் திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் திரு. இ .வி கமலராஜன்,கிராம சேவை நிருவாக சேவை உத்தியோகத்தர் திருமதி.பரிமளவாணி, செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் K.பரமானந்தம், கிராம சேவை உத்தியோத்தர்கள், பொருளாதர அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஆலய நிருவாகிகள் ,பாடசாலை நிருவாகிகள் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். இதன் போது நாளை தொடக்கம் அக்டோபர் 31ம் திகதி வரை திருக்கோவில் பிரதேசத்தில் அனைத்து பகுதிளையும் சுத்தப்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

– Sathasivam Nirojan

Leave A Reply

Your email address will not be published.