குழந்தைகளே, 2 நாள்கள் சாப்பிடாதீர்கள்: சர்ச்சையான எம்எல்ஏ விடியோ

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனை கட்சி எம்.எல்.ஏ, குழந்தைகளிடம் அவர்கள் பெற்றோர் தனக்கு வாக்களிக்காவிட்டால் இரண்டு நாள்கள் சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தியது சர்ச்சையாகியுள்ளது.

கலாம்நூரி எம்எல்ஏ சந்தோஷ் பங்காரின் இந்த செயல் தேர்தல் ஆணையம் வெளியிட்ட குழந்தைகளை தேர்தல் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக் கூடாது என்கிற வழிகாட்டுதலை மீறுவதாக உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

சமூக வலைத்தளங்களில் வைரலான அந்த காணொலியில் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் 10 வயதுக்கு குறைவான குழந்தைகளிடம் எம்எல்ஏ பேசுவது இடம்பெற்றுள்ளது.

அவர், “அடுத்த தேர்தலில் உங்கள் பெற்றோர் எனக்கு வாக்கு அளிக்கவில்லையெனில் 2 நாள்களுக்குச் சாப்பிடாதீர்கள்” எனத் தெரிவித்துல்ளார்.

மேலும், பெற்றோர் ஏன் சாப்பிடவில்லை எனக் கேட்டால் சந்தோஷ் பங்காருக்கு வாக்களியுங்கள், அப்போதுதான் சாப்பிடுவோம் எனச் சொல்லுமாறு அவர் கேட்டதோடு அதனை திருப்பி ஒப்பிக்கவும் செய்கிறார்.

முன்முடிவுகளற்று ஆணையம் உடனடியாக இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் விஜய் வடேட்டிவார் தெரிவித்துள்ளார்.

சந்தோஷ் பங்கார் இப்படியான சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருபவர். சமீபத்தில் 2024-ல் மோடி மீண்டும் பிரதமராகவில்லையெனில் தான் தூக்கிட்டு கொள்வதாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலதிக செய்திகள்

புத்தளத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை!

நீர்கொழும்பிலும் ஒருவர் சுட்டுக்கொலை!

வெற்றியை தேடும் பணியில் புதிய முயற்சி.. சைதை துரைசாமி டி.என்.ஏ-வை கேட்கும் காவல்துறை!

வாகன ஓட்டிகளே அலெர்ட்… சென்னையின் முக்கிய சாலைகளில் இன்று முதல் ஒரு வாரம் போக்குவரத்து மாற்றம்

Leave A Reply

Your email address will not be published.