மைத்திரிபாலவும் இந்தியா விஜயம்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

எதிர்வரும் வாரத்தில் மைத்திரிபால சிறிசேன இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் உத்தியோகபூர்வ அழைப்பின் அடிப்படையில் அவர் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய அரசியல் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் இந்தியத் தலைவர்களுடன் மைத்திரிபால பேச்சு நடத்தவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விஜயத்தின் பின்னர் மைத்திரிபால அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

அமெரிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் அமெரிக்க வாழ் இலங்கையர்களை சந்தித்து மைத்திரிபால பேச்சு நடத்தவுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தரப்புக்களுக்கு இந்திய மத்திய அரசு தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் அண்மையில் இந்தியா சென்ற அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் நேற்று நாடு திரும்பியிருந்தனர்.

More News

குழந்தைகளே, 2 நாள்கள் சாப்பிடாதீர்கள்: சர்ச்சையான எம்எல்ஏ விடியோ

வாகன ஓட்டிகளே அலெர்ட்… சென்னையின் முக்கிய சாலைகளில் இன்று முதல் ஒரு வாரம் போக்குவரத்து மாற்றம்

வெற்றியை தேடும் பணியில் புதிய முயற்சி.. சைதை துரைசாமி டி.என்.ஏ-வை கேட்கும் காவல்துறை!

நீர்கொழும்பிலும் ஒருவர் சுட்டுக்கொலை!

புத்தளத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை!சுவிஸ் : 15 பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த ரயில் கடத்தல்காரனை போலீசார் சுட்டுக் கொன்றனர் (Videos)

Leave A Reply

Your email address will not be published.