இராணுவப் பாதுகாப்புடன் வெடுக்குநாறிமலைக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் விஜயம்.

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்துக்குப் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் இராணுவப் பாதுகாப்புடன் இன்று விஜயம் செய்திருந்தனர்.

இதன்போது, ஆலயத்தின் நிர்வாகத்தினரும் அங்கு பிரசன்னமாகியிந்தனர்.

இராணுவப் பாதுகாப்புடன் சென்ற பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் இது தங்களது இடம் எனத் தெரிவித்து அப் பகுதியைச் சுற்றிப் பார்வையிட்டதுடன், ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் விக்கிரகப் பகுதிகளிலும் பாதணிகளுடன் நடமாடியுள்ளனர்.

இந்தக் குழுவினரின் கருத்தை மறுத்த ஆலய நிர்வாகத்தினர் இது தமது மூதாதையர்களால் பூர்வீகமாக வழிபட்டு வந்த பிரதேசம் என்று இதன்போது தெரிவித்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.