யாழ்.பொலிஸ் பரிசோதனை நிகழ்வு.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வும் பொலிஸ் அணிவகுப்பு நிகழ்வும் இன்று காலை இடம்பெற்றது

பரிசோதனை நிகழ்வில் யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்த பரிசோதனைகளை முன்னெடுத்தார்.

அணிவகுப்பு நிகழ்வில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடைமையாற்றும் பொலிஸாரின் சீருடைகள், ஆயுதங்கள், வாகனங்கள், பரிசோதிக்கப்பட்டதோடு பொலிஸாருக்கான விசேட அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் யாழ். பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜருள், யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.