இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 72 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 72 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.

அதன்படி 20 ஓவர்கள் முடிவில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 06 விக்கட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. சதீர சமரவிக்ரம 51 ஓட்டங்களைப் பெற்று தனது முதல் T20 அரைசதத்தைப் பெற்றார்.ஏஞ்சலோ மத்தியூஸ் 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஆப்கானிஸ்தான் 17 ஓவர்களில் 115 ரன்கள் எடுத்தது.

Leave A Reply

Your email address will not be published.