இலங்கை – ஆப்கானிஸ்தான் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியில் சில மாற்றங்கள்.

இலங்கை – ஆப்கானிஸ்தான் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வருகை தந்துள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டி இன்று (21) இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

இன்றைய போட்டிக்கு குசல் ஜனித் பெரேரா, அகில தனஞ்சய மற்றும் நுவன் துஷார அழைக்கப்படவுள்ளதாகவும், தனஞ்சய டி சில்வா, மஹிஷ் தீக்ஷன மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாகவும் கிரிக்கட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய போட்டியில் கமிந்து மெண்டிஸுக்கும் வாய்ப்பு கிடைக்குமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.